தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (24.09.2022) சென்னை வண்டலூரிலிருந்து தமிழகம் முழுவதும் பசுமைப்பரப்பை அதிகரித்திடும் வகையில், பசுமை தமிழகம் இயக்கத்தினைத் தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில் பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாவட்ட வன அலுவலர் ஜி.கிரண், ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் மாநகராட்சி கோட்டத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, மாமன்ற உறுப்பினர்கள் விஜயா ஜெயராஜ், நாகராஜ், சுரேஷ் குமார் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments