பெரியார் பிறந்த தினம், காஞ்சி தந்த திராவிட பல்கலை கழகம் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், இருண்டு கிடந்த தமிழகத்தை மீட்க வந்த கொள்கை பேரியக்கமாம் திராவிட முன்னேற்ற கழகம் தோன்றிய மாதமான செப்டம்பர் மாதத்தை கழக தகவல் தொழில்நுட்ப அணி திராவிட மாதம் என அறிவித்து கொண்டாடி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கழக முதன்மை செயலாளார் தலைமையில், மத்திய மாவட்ட பொருப்பாளர் K.வைரமணி மற்றும் மாநகர மேயர் M.அன்பழகன், திருவரங்கம் தொகுதி MLA M.பழனியாண்டி முன்னிலையில் திருச்சி மத்திய மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் சார்பில் முதல் மொழிப் போர் பேரணி நடைபெற்றது.
உறையூரில் இருந்து பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கடைசி காலங்களில் வாழ்ந்து மறைந்த புத்தூர் பெரியார் மாளிகை வரை இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் 350 பேர் கலந்துகொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments