Saturday, August 23, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை விபத்து; 10 ஆண்டுகளில் 503பேர் உயிரிழப்பு

திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் (என்எச் 83) சுமார் 14.5 கிமீ தொலைவில் திருச்சி மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்டோர் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம்  பாலாஜி நகரை சேர்ந்த சக்திவேல் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் விபரம் கேட்டு விண்ணப்பித்துள்ளார். மனுவில் கேட்கப்பட்டது போன்று 2009 முதல் 2022 வரை சாலை விபத்தில் இறந்தவர்களின் விவரம் அளிக்கப்பட்டுள்ளது கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் திருச்சி -துவாக்குடி- தஞ்சை நெடுஞ்சாலையில் 503 பேர் விபத்தில் இறந்துள்ளனர்.

குறிப்பாக இந்த ஆண்டு மே மாதம் வரை திருவெறும்பூர் அருகே நடந்த விபத்துகளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். முக்கிய பேருந்து நிறுத்தங்களான எஸ்ஐடி கல்லூரி, ஆயில் மில், கைலாஷ் நகர் மற்றும் அம்மன் நகர் ஆகிய இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இருப்பினும், இந்த சாலைகளில் சர்வீஸ் சாலை வேண்டுமா, அல்லது சுரங்கபாதை, அல்லது உயர்மட்ட நடைபாதை வேண்டுமா என்பதில் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலையில் உள்ள மீடியன் திறப்புகள் நகர காவல்துறை, மாவட்ட காவல்துறை மற்றும் என்ஹெச்ஏஐ அதிகாரிகளால் விபத்துக்களை கட்டுப்படுத்தப்பட முடியவில்லை என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் அதிகமாகவும், சாலையை கடக்க பொதுமக்கள் அதிக அளவிலும் செல்கின்றனர். மேலும் ​​இரு சக்கர வாகனங்களில் குழந்தைகளுடன் நெடுஞ்சாலையை கடக்கும் பெற்றோர்கள், வேகமாக வரும் பேருந்துகள் மற்றும் லாரிகளால், விபத்துக்கள் தொடர்ந்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

காட்டூர், திருவெறும்பூர் மற்றும் பால்பண்ணை அருகே நெடுஞ்சாலையில் குறைந்தது ஐந்து இடங்களாவது கட்டுப்பாடற்ற போக்குவரத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என பாதசாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பெரும்பாலான நீண்ட தூர மொஃபுசில் பேருந்துகள் நெரிசல் மிகுந்த பகுதிகள் வழியாக வேகமாகச் செல்கின்றன.

நெடுஞ்சாலையை கடக்க டைமர்களுடன் கூடிய பாதசாரி சிக்னல்கள் தேவை என்று காட்டூர் மக்கள் கூறினார். மேலும் NHக்கான சர்வீஸ் ரோடு தாமதமாகி வருவதால், பாதிக்கப்படக்கூடிய இடங்களில் நடைபாதை ஸ்கைவாக்குகள் மட்டுமே பாதசாரிகளைப் பாதுகாக்க முடியும் என்று திருச்சி மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் தற்போது நடைபெறும் விபத்துக்களை தடுக்க சாலைகளில் சிக்னல், வேகத்தடை அமைத்தல், சாலைகளில் நடுவே உள்ள தடுப்புகளை அகற்றி பாதைகள் உருவாக்குதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *