திருச்சி மாவட்டம் மருங்காபுரி அடுத்த டி. இடைப்பட்டி நெல்லிக்குளத்தில சுமார் 40 ஏக்கர் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு அதிகாரிகள் அகற்றினர்.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி அடுத்த டி. இடையப்பட்டி கிராமத்தில் நெல்லிக்குளம் உள்ளது, சுமார் 180 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தில் 40 ஏக்கர் ஆக்கிரமிப்பு இருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவில் தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உத்தரவிட்டதை அடுத்து துவரங்குறிச்சி அருகே இடையப்பட்டி கிராமத்தில் உள்ள நெல்லிக்குளத்தில் உள்ள 40 ஏக்கர் ஆக்கிரமிப்புகளை நீர்வளத்துறை உதவி பொறியாளர் ராதா கிருஷ்ணன், வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு 55 நபர்களிடம் இருந்த 40 ஏக்கர் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments