Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு ஆயத்த பயிற்சி – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தமிழக அமைச்சர் (மீன்வளம் நிதி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம்) 12.11.2017 அன்று சட்டப் பேரவையில் அறிவித்ததன்படி சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து ஆண்டு தோறும்

20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யோக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை 
வழங்கப்பட்டுள்ளது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் (Application Form) மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines)) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின்

www.fisheries.tn.gov.inஎன்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பபடிவங்களை திருச்சி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகின்ற 31.10.2022-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் எண்.4 காயிதே மில்லத்தெரு, காஜாநகர், திருச்சி-20 (தொலைபேசி எண் (0431 2421173) அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *