தமிழக அரசை கண்டித்து, சட்டசபை மரபுகளை மீறிய சபாநாயகரை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட நூற்றுக்கு மேற்பட்டோரை காவல் துறையினரால் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கையை கண்டித்து பல்வேறு திருச்சியில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு திருச்சி மாநகர மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேலு
தலைமையில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில்… தமிழக அரசை கண்டித்தும், கைது செய்யப்பட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷமிட்டு அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments