திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களின் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் தனலட்சுமி கல்லூரி மாணவர்கள் கல்லூரி நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் இல்லையென்றால் வரும் 21ஆம் தேதி மாணவர்கள் ஒன்று திரண்டு பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் 3வது நாட்களாக கல்லூரி நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments