Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வடகிழக்கு பருவமழை மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அரசு முதன்மைச் செயலாளர் பொதுப்பணித்துறை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர். க. மணிவாசன்  தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்மா.பிரதீப்குமார்  முன்னிலையில் இன்று (26.10.2022) நடைபெற்றது.

அரசு முதன்மைச் செயலாளர் பொதுப்பணித்துறை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டகண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:’

வடகிழக்கு பருவ காலம் டிசம்பர் மாதம் வரை என்றாலும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிககன மழை பெய்துள்ளது எனவே எதிர்வரும் பிப்ரவரி மாதம் வரை தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அனைத்து நிவாரண பாதுகாப்பு மையங்களும் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வருவதையும், தேவையானஅடிப்படை வசதிகள் உள்ளீட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும். முதல் நிலை மீட்டிப் பணியாளர்களின்பங்களிப்பு பருள் மழைக் காலத்தில் இன்றியமையாதது ஆகளே, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளைஅளித்திட வேண்டும், பொது மக்களில் சில தங்களது நிலங்களை பாதுகாக்கும் வகையில், நீர்நிலைகளின்கரைகளை உடைத்துவிடாமல் கண்காணித்திட வேண்டும்

மேலும், பொதுமக்கள் கிராமப் பகுதிகளில் உள்ள குளம். குட்டை போன்ற நீர்நிலைகளில் குளிக்கச் சென்று ஆபத்தில் மாட்டிக் கொள்ளாமல் பாதுகாப்புப் பணிகளை துரிதப்படுத்திட வேண்டும். அதேசமயம், ஆழம் குறைவான நிர்நிலைகளிலும் கவனமாக இருக்க பொதுமக்களை அறிவுறுத்திட வேண்டும் வடகிழக்கு பருவ மழை தொடர்பான பணிகளுக்கு அரசு அதிக முக்கியதுவம் அளித்து வருகிறது. எனவே, அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து அதிக கவனம் செலுத்தி எவ்வித பாதிப்பு ஏற்படாத வண்ணம்  மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மழைக்காலங்களில் மின்கம்பங்கள் மற்றும் மின்சம்பிகள் விழாமல்காணித்திடவும், தேவையான அளவு கம்பங்கள் கவனமாக இருப்பு வைத்துக்கொள்ளவும், மழைக்காலங்களில் அரிசி முதலான உணவுப் பொருட்கள் நல்ல தரத்துடன் இருப்பு இருப்பதை உறுதி செய்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது; அபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து அதன் ஸ்திரதன்மை குறித்து ஆய்வு செய்த பின்னரே இடிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் ஏதாவது சம்பவம் நடந்தால், உடனே வருவாய்த் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும். பருவ மழைக் காரணமாக ஏற்படும் வீடு, பயிர் போன்ற சேதாரங்களை கால தமதமின்றி உடனடியாக கணக்கெடுக்க வேண்டும் என அரசு முதன்மைச் செயளளர் பொதுப்பணித்துறை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித்துறை. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பள்ளிக் கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துரை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்ஆய்வில், கலைஞரின் அனைந்து கிராம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலங்கள மேம்படுத்தி ஆழதுளைக்கிணறு உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி சாகுபடி நிலங்களின் பரப்பை அதிகரிப்பதன் வாயிலாக விவாசாயிகளின் பொருளாதார நிலையினை மேம்படுத்துதல் தொடர்பாக பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்டது, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் சமுத்துவபுரம் ஆய்வு (சீரமைப்பு மற்றும் மீட்டுருவாக்கம்) திட்டப்பணிகள் குறித்தும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் நடிக்கு நாமே திட்டம், மழைக்காலத்திற்கு முன்பு மழைநீர் வடிகால் பகுதிகளை தூர்வாருதல், ஜல் ஜீவன் திட்டம், அம்ரூத் 2.0 மற்றும் தூய்மை இந்தியா திட்டம் 2,0(ஸ்வச் பாரத் திட்டம்) திட்டப்பணிகள் குறித்தும், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் விமானநிலைய விரிவாக்கத்திற்கான நிலங்கள் உள்ளீட்ட பணிகள், இணைய வழி பட்டாமாறுதல், இணையவழி சான்றிதழ்கள் வழங்குதல் தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எண்ணும் எழுத்தும் இயக்கம் மற்றும் பள்ளி உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்தும், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் பணிமுன்னேற்றம் குறித்தும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்திட்ட துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நாள்முதல்வன் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டங்களின் பணிமுன்னேற்றம் குறித்தும், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் சாலைஉணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு விழிப்புனர்வுடன் செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக சிறப்பு உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை காட்சிப்படுத்தி மாதிரி ஒத்திகைப் பயிற்சி நடத்தி காண்பிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் டாக்டர்.இரா.வைத்திநாதன், காவல். ஆணையர் கார்த்திகேயன்,மாவட்ட வருவாய் அலுவலர்  இரா.அபிராமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வே.பிச்சை. மாவட்ட அலுவலர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை(பொ) ப.அம்பிகா, தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்   கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *