திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் நாளை 03.11.2022 ஒருநாள் குடிநீர் வினியோகம் இருக்காது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்பணி நிலையம் தொடர்புடைய மரக்கடை உயர்நிலை நீர்தேக்கத்தொட்டியின் பகிர்மான குழாயில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் மரக்கடை மற்றும் விறகுபேட்டை பகுதிக்குப்பட்ட தெருக்களுக்கு நாளை 03.11.2022 ஒருநாள் குடிநீர் வினியோகம் இருக்காது .
04.11.2022 முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் . எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் , குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், கேட்டுக் கொண்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments