2022-23-ம் நிதியாண்டில் தமிழகத்தில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சுய தொழில் தொடங்குபவர்களுக்கு உதவும் வகையில் சுயதொழில் மானியம் வழங்கும் வகையில் தகுதியான திருநங்கைகளிடம் இருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் தொழில் குறித்த திட்ட அறிக்கை, தொழில் பயிற்சி பெற்று இருந்தால் அதன் விவரம், தொழில் முன் அனுபவர் குறித்த விவரம், ஆதார் அட்டை, வாரிய அடையாள அட்டை, ரேஷன்கார்டு போன்ற சான்றுகளுடன் வரும் 25.11.2022 தேதிக்தகுள் மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அஞ்சல் மூலம் அனுப்ப மாவட்ட சமூக அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் மேலும் விவரங்களுக்கு 0431-2413796 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்து உள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments