திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வேங்கைகுறிச்சி ஊராட்சியை சேர்ந்த பொம்மம்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் 100-நாள் வேலை திட்டத்திற்கு அட்டை வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 8 மாத காலமாக இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை வேலை வழங்குவதாகவும்,
மேலும் வேலை வழங்கினால் 7 கி.மீ. அப்பால் வேலை கொடுப்பதாலும், இதனால் வயதானவர்கள் வேலைக்கு நடந்து செல்ல முடியவில்லை எனவும், மற்றொரு தரப்பினருக்கு மட்டும் வேலை வழங்கி பாரபட்சம் காட்டுவதாக கூறி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவகத்தை முற்றுகையிட்டு 100 நாள் பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
தர்ணாவில் ஈடுபட்ட பெண்களிடம் மேலாளர் அண்ணாத்துரை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், காவல்துறை உதவி ஆய்வாளர் சரவணன், ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், 1 வார காலத்திற்குள் இந்தப் பகுதி மக்களுக்கு வேலை வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தன் பேரில் தர்ணா போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments