திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே அய்யனார் கோவில்பட்டியில் குடியிருப்பு பகுதியில் வியாழக்கிழமை இரவு மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது.
இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான துவரங்குறிச்சி தீயணைப்புத் துறை வீரர்கள் மலைப்பாம்பினை லாபகரமாக பிடித்தனர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு 12 அடி நீளம் இருந்தது.
பாம்பை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பினை அருகிலுள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments