Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காவலர் தேர்வு மையங்களை மாவட்ட காவல் ஆணையர் நேரில் ஆய்வு

 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வினை சிறப்பான முறையில் நடத்துவது தொடர்பாக காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 3552 பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக்காவல் படை), தீயணைப்புத்துறை மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கான காவலர் தேர்வு-2022 இன்று (27.11.22) திருச்சி மாநகரில் உள்ள 16 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வானது பகுதி -1 தமிழ்மொழி தகுதித்தேர்வு 80 மதிப்பெண்களுக்கும், பகுதி-2 முதன்மை எழுத்துத்தேர்வு 70 மதிப்பெண்களுக்கும் என இரண்டு பகுதிகளாக நடைபெற்றது.

இத்தேர்வு நடைபெற்ற மையங்களான ஜமால்முகமது கல்லூரி, சமது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அய்மான் பெண்கள் கல்லூரி, ஆக்ஸ்போர்டு கல்லூரி, ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெஸ்டிரி மேல்நிலைப்பள்ளி, நேஷனல் கல்லூரி, காவேரி கல்லூரி, ஜோசப் மேல்நிலைப்பள்ளி, மற்றும் கேம்பியன் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற்ற காவலர் தேர்வினை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தும், பணியில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

         

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *