Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணி (Integrated Bus Terminal) மற்றும் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் (Multi Utility Facilities Centre) ரூ.243.78 கோடி, கனரக சரக்கு வாகன முனையம் கட்டுமானப் பணி மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.106.20 கோடி ஆக மொத்தம் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.                     

பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்மான இடத்தின் மொத்த பரப்பளவு 40.60 ஏக்கர். புறநகர் பேருந்து நிறுத்த தடங்கள் 124 எண்ணிக்கை. நீண்ட நேர பேருந்து நிறுத்த தடங்கள் 142 எண்ணிக்கை. குறைந்த நேர நிறுத்த தடங்கள் 78 எண்ணிக்கை. ஆக மொத்த பேருந்து நிறுத்த தடங்களின் மொத்த எண்ணிக்கை 404. நகரப்பேருந்து நிறுத்த தடங்களின் எண்ணிக்கை 60. இங்கு கட்டப்படவுள்ள கடைகளின் எண்ணிக்கை 70. நான்கு சக்கர வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கை 556. இரண்டு சக்கர வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கை 1125. ஆட்டோ  நிறுத்தங்களின் எண்ணிக்கை 350. நகரும் படிகட்டுகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. 

இங்கு பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் ( Multi utility facilities centre ), கனரக சரக்கு வாகன முனையம் ( Truck Terminal), தங்குமிட வசதி, உணவக கட்டிடம் ஆகியவை அமைய உள்ளது. சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ( Roads & Storm Water Drain and other Infrastructure facilities ) சிமெண்ட் கான்கிரீட் சாலைகள்,

ஒருங்கிணைந்த பேருந்து முனைய பகுதியில் பசுமை பரப்பு, மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் மழைநீர் வடிகால் செல்லும் வசதி ஆகியவை அமையவுள்ளது. இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் முஅன்பழகன், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் இ.ஆ.ப.,   நகரப்பொறியாளர் சிவபாதம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *