கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக SRM குழும நிறுவனங்கள், (ராமபுரம் & திருச்சி வளாகம்) சென்னையின் L & T EduTech உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எஸ்ஆர்எம் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர்.ஆர்.சிவக்குமார்,லார்சன் & டூப்ரோ லிமிடெட் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர், எஸ்.என். சுப்ரமணியன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமானது, பொறியியல் மற்றும் ஐடி துறை சார்ந்து படிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் படிப்புகள் வழங்குதல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு தொழில் துறை பயிற்சி பெறும் வகையில் தங்கும் வசதிகளை ஏற்பாடு செய்து தருதல் L&T EduTech இலிருந்து அளிக்கும் சான்றிதழ் பயிற்சி மற்றும் L&T EduTech ஆல் தகுதியானவர்கள் என்று கருதப்படும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான வேலை வாய்ப்பு நடவடிக்கைகளை எளிதாக்கும். கற்பித்தல், மதிப்பீடு, மாற்றியமைத்தல், நவீனமயமாக்கல், தரக் கட்டுப்பாடு ஆகியவற்றில் L&T EduTech உறுப்பினர்களின் உதவிவழிகாட்டல் பெறுவது என்பனவாகும்.
இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன், ராமாபுரம் & திருச்சி வளாகம், இணைத்தலைவர் எஸ்.நிரஞ்சன், எல்&டி கன்ஸ்டிரக்ஷன் கார்ப்பரேட் ஹெட் ஆர். கணேசன், எல்&டி எஜுடெக் காலேஜ் கனெக்ட் தலைவர் ஃபெபின் எம்.எஃப், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments