கடந்த 01.12.22-ம்தேதி அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திடீர் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் செல்போன்களை திருட்டு போய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதே பகுதியை சேர்ந்த கணேஷ் @ திடீர் நகர் கணேஷ் என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் எதிரி கணேஷ் @ திடீர் நகர் கணேஷ் மீது சிறுவனை கடத்தி கொலை செய்ததாக ஒரு வழக்கும், சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக ஒரு வழக்கும். வழிப்பறி மற்றும் இருசக்கர வாகனம் திருடுடியதாக ஒரு வழக்கு உட்பட எதிரி மீது 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததது.
எனவே, கணேஷ் @ திடீர் நகர் கணேஷ் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், பகல் மற்றும் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதும், கத்தியை காட்டி பணம் பறிப்பது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து,
திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments