திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருச்சக்கர வாகனங்களை திருடி வந்த ஆரியம்பட்டி வேல்முருகனை வாகன சோதனையில் கைது போலீஸார் அவனிடமிருந்து 10 இருச்சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மணப்பாறையில் கடந்த சில மாதங்களாகவே இருச்சக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. இதுகுறித்து மணப்பாறை போலீஸார் புகார்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்காக காவல் துணை கண்காணிப்பாளர் ந.ராமநாதன் அறிவுறுத்தலின்படி சட்டம் – ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நொச்சிமேடு பகுதியில் வாகன தணிகையில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணனிடம் சிக்கிய வாலிபர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியதையடுத்து அந்த வாலிபர் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடைபெற்றது.
விசாரணையில் அந்த வாலிபர் கருப்பூர் கிராமம் ஆரியம்பட்டியை சேர்ந்த ராஜப்பன் மகன் வேல்முருகன்(26) என்பதும், மணப்பாறை, புத்தாநத்தம், கருமலை ஆகிய பகுதிகளில் இருச்சக்கர வாகனங்கள் திருடியதும், அவர் மீது 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வேல்முருகனை வழக்கு பதிந்து கைது செய்த மணப்பாறை போலீஸார், அவனிடமிருந்து 10 இருச்சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments