Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியின் விரைவு வாக்காளர் பட்டியல் – ஆட்சியர் வெளியீடு!

தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் திருச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று அனைத்து கட்சி முன்னிலையிலும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டார்.

Advertisement

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில் 01-01-2021-ஆம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு, சிறப்பு சுருக்கமுறைத்திருத்தம் நடைபெறவுள்ளது. அதன் பொருட்டு வரைவு வாக்காளர் பட்டியல், திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

இதில் திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை : 2260439

இதில் ஆண்களின் எண்ணிக்கை : 1099977

இதில் பெண்களின் எண்ணிக்கை : 1160256

பிற பாலினத்தவர்களின் எண்ணிக்கை : 206 அடங்கும்.

Advertisement

கடந்த 14.02.2020 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து, ஆண்கள் 21897 பேரும், பெண்கள் 21209 பேரும், பிற பாலினத்தவர்கள் 9 பேரும் என 43115 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல்…வரைவு வாக்காளர் பட்டியலில் , ஆண்கள் 2974 பேரும், பெண்கள் 3468 பேரும், பிற பாலினத்தவர்கள் 6 பேரும் என 6448 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை, ஸ்ரீரங்கம். திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தனித்தனி வாக்காளர் வரைவு பட்டியலை ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டார். இதனை காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.

மேலும் திருச்சி மாவட்டத்தில் ஶ்ரீரங்கம் தொகுதியில் அதிக வாக்களர்களாக 300769 பேர் உள்ளனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *