திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நாள் ஒன்றுக்கு 9 விமானங்கள் வெளிநாடுகளில் இருந்து வருகிறது. அதில் பயணிக்கும் இரண்டு சதவீத பயணிகளை மட்டும் இன்று முதல் கோவிட் பிஎப் 97 வகை வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.
பல நாடுகளில் பயணம் மேற்கொண்டு வந்தவர்கள் மற்றும் சோதனை நடத்தக்கூடியவர்கள் பட்டியலை விமான நிலைய அதிகாரிகள் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு கொடுக்க உள்ளனர். சோதனை காலை 10 மணியிலிருந்து துவங்கும் என அறிவிக்கப்பட்டது.
நண்பகல் 12 மணிக்கு வந்த துபாய் விமானத்தில் உள்ள பயணிகளிடம் பி எப் 7 வகை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய சோதனை துவங்கியது. BF.7 வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரண்டு சதவீதம் (9விமானங்களில்) என்பது சுமாராக 20 வெளிநாட்டில் பயண மேற்கொண்ட பயணிகளிடம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்படும். துபாயிலிருந்து வந்த விமானத்தில் உள்ள 2% பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஆர்.டி.பிசி.ஆர் சோதனையில் மருத்துவர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு விமான நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சர்வதேச நாடுகளில் பயணம் செய்த பயணிகளின் 2% பட்டியல்களை அளிப்பார்கள் என திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments