திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தில்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமி பிறவியிலேயே தோல் வறட்சி நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சிறுமியின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று பார்வையிட்டு அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி மருத்துவ செலவிற்காக ரூபாய் 50,000 பணத்தை சிறுமியின் பெற்றோரிடம் வழங்கினார்.
மேலும் சிறுமியின் மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments