திருச்சிராப்பள்ளி உப்பிலியாபுரம் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி தொழிற்சாலை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் Dr.R.ரமேஷ்பாபு, தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது உணவு பொருள் தயாரிக்க பயன்படுத்திய இரசாயணம் (Hypo Solution) கண்டறியப்பட்டு, சுமார் 3725 லிட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அங்கு தயார் செய்யப்பட்டு, பொட்டலமிடப்பட்ட ஜவ்வரிசி 5445 கிலோ உணவு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்பூர்வ உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் படி பிணை பத்திரம் பெறப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இரசாயணம் மற்றும் உணவு பொருள் தொழிற்சாலையிலேயே வைத்து சீலிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கண்ட தொழிற்சாலையில் வெளியேறும் இரசாயணக் கழிவுகள் அருகில் உள்ள வாய்க்காலில் கலப்பதை முன்னிட்டு மேல் நடவடிக்கைகாக மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியபடுத்தும் வகையில் உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கோப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட நியமன அலுவலர் R.ரமேஷ்பாபு கூறுகையில் ….. தொழிற்சாலையில் சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளின் பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006-ன் படி மேல் நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
எனவே பொதுமக்கள் பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் குறித்து புகார் அளிக்க விரும்பினால் கீழ்க்கண்ட 99 44 95 95 95 / 95 85 95 95 95. மாநில புகார் எண்: 94 44 04 23 22 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும், அவ்வாறு புகார் அளிக்கும் பொது மக்களின் விபரம் ரகசியம் காக்கப்பட்டு, அந்த கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments