திருச்சி மாவட்டம்,திருவரம்பூர் அருகே, பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் அர்ஜுனன், (47). இவர் புலித்தோல் விற்க முயற்சி செய்வதாக, திருச்சி வனக்காவல் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர் நவீன் குமார் தலைமையிலான குழுவினர், அர்ஜுனன் வீட்டை சோதனையிட்டதில், புலி தோல் ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
புலித்தோல் மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்த வனக்காவல் குழுவினர், அவற்றை வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அர்ஜுனனை கைது செய்து விசாரித்ததில், அவர் மீது பல்வேறு வன குற்றவழக்கு இருப்பது தெரிய வந்தது.
மேலும், வண்ணக் கலவை சேர்க்கப்பட்டிருப்பதால், அவரிடம் பறிமுதல் செய்தது, உண்மையான புலித்தோல் தானா? என்பது குறித்தும் வனத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments