திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாகாளிக்குடி உஜ்ஜியினி மாகாளி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று (27.01.2023) நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் பிள்ளை மனைவி அன்னபூரணி (76) சமயபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு நேற்று வந்தார்.
அதனை தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிற்கு வந்த பக்தர் கூட்டத்தில் இருந்த அன்னபூரணி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.
இதுக்குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் அன்னபூரணி புகார் அளித்தார் புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments