Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை போன தங்கம், வைரம் நகைகள் மீட்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். தொழிலதிபரான இவரது வீட்டில் கடந்த 23ஆம் தேதி காலை வீட்டின் பூட்டை உடைத்து 92 பவுன், வைர வளையல் மற்றும் நெக்லஸ் (மதிப்பு ரூ.5,00,000), பிளாட்டின ஆரம் (மதிப்பு ரூ.5,00,000/-), லெனோவா லேப்டாப் ஒன்று (மதிப்பு 50,000/-) சோனி லேப்டப் ஒன்று (மதிப்பு ரூ.60,000) 4 ஸ்மாட் போன் (மதிப்பு ரூ.50,000/-) மற்றும் 1,50,000/- மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடுபோனது.

இது சம்பந்தமாக தேவேந்திரன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில்சம்பவ இடத்திற்கு மத்திய மண்டல டிஐஜி சரவணசுந்தர், திருச்சி எஸ் பி சுஜித் குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த நிலையில் திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் திருச்சி மாவட்ட காவல் துணைத்தலைவர் சரவணசுந்தர் மேற்பார்வையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் முன்னிலையில் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில, திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், பெல் இன்ஸ்பெக்டர் கமலவேணி மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்ற வாலியை தொடர்ந்து தேடி வந்தனர்.

அப்போது மஞ்சத்திடல் சோதனை சாவடியில் வாகன சோதனை செய்த போது அந்த வழியாக வந்த காரை மறித்த போது அது நிற்காமல் சென்றதால் போலீசார் அந்த காரை விரட்டியுள்ளனர். அந்த காரை கல்லனை ரோட்டில் சென்றபோது வேங்கூர் சுடுகாட்டிற்கு அருகில் மடக்கி பிடித்த போது காரில் இருந்து தப்பி ஓடிய நபரை பிடித்து விசாரித்ததில் அவன் பெயர் கார்த்திக் (எ) செல்வகார்த்திக் என்றும், அவருக்கு திருவெறும்பூர் நவல்பட்டு காவல் நிலைய குற்ற வழக்குகள் ஏற்கனவே உள்ளதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த காரை சோதனை செய்த போது காரில் 22 பவுன்ட் தங்க நகை மற்றும் ரூ.50,000 பணம் இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த நகையை தேவேந்திரனிடம் எடுத்துச் சென்றுகாட்டிய போது அது தங்களுடைய நகையினை கூறியதை தொடர்ந்து செல்வா கார்த்தியை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

திருவையாறில் உள்ள புதுஅஹ்ரகாரத்தில் உள்ள தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த 118 பவுன் நகை அதன் மதிப்பு ரூ.47,20,000, பணம் 4 லட்சத்து 50 ஆயிரம் பணம், லேப்டாப், செல்போன் திருட்டுக்கு பயன்படுத்திய கார்,பயன்படுத்திய இரும்பு கம்பி மற்றும் திருப்புலி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தர் கூறியதாவது…. திருவெறும்பூர் பகுதியில் கடந்த 23ஆம் தேதி நடந்த கொள்ளை நடைபெற்ற இடத்திற்கு நானும் திருச்சி எஸ் பி சுஜித் குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தோம். முதற்கட்ட விசாரணையில் 150 என புகார் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் 92 பவுன் நகை, 5 லட்சம் பணம், 5 கேரட் பிளாட்டினம், 6 கேரட் வைரம் என புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், தலைமையில் எஸ்ஐ சதீஷ் ஏட்டு செந்தில் மற்றும் போலீசார் சதீஷ்குமார், ஜேம்ஷ் செல்வராஜ், பெல் இன்ஸ்பெக்டர் கமலவேணி தலைமையில்

எஸ் ஐ சசிகுமார், ஏட்டுகள் அருண்மொழிவர்மன், இன்ப மணி, ஹரிஹரன், போலீசார் ராஜேஷ், சிலம்பரசன், துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் எஸ்ஐ-கள் மாரிமுத்து, மணிகண்டன், எஸ் எஸ் ஐ வேல்அழகன், ஏட்டு முத்துக்குமார், போலீசார் இளையராஜா, அறிவழகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை குற்றவாளிகளைகைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 118 பவுன்நகை 5 லட்சம் மதிப்பிலான பிளாட்டினம், 5 லட்சம் மதிப்புள்ளான வைரம், 1.50 லட்சம் மதிப்பிலான வெள்ளி, 2 லேப்டாப், செல்போன் மற்றும் ராமநாதபுரத்தில் திருடப்பட்ட கார் என ரூபாய் 60.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று உரியவர்களிடம் பொருள் ஒப்படைக்கப்படும். குற்றவாளி மீது திருவெறும்பூர் காவல் நிலையத்தில் 2019, நவல்பட்டுகாவல் நிலையத்தில் 2021 ஆகிய ஆண்டுகளில் வழக்கு உள்ளது என்று கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *