Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஒரே மாதத்தில் 271 ரவுடிகள் கைது

மத்திய மண்டலத்தில் ரவுடி வேட்டை 30 நாட்களில் 271 ரவுடிகள் கைது, 2169 ரவுடிகளின் வீடுகளில் சோதனை, 51 கொடூர ஆயுதங்கள் கைப்பற்றல்
798 பிடிக்கட்டளைகள் நிறைவேற்றம்.

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை கரூர், பெரம்பலூர், அரியலூர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும் பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதை உறுதி செய்யவும், பொது அமைதியை நிலைநாட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 01.01.2023 முதல் 31.01.2023 வரை நடத்தப்பட்ட ரவுடி வேட்டையில் மொத்தம் 193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 271 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

(திருச்சி 28, புதுக்கோட்டை 28, கரூர் 26, பெரம்பலூர் 3, அரியலூர் 12, தஞ்சாவூர் 49, திருவாரூர் 52 நாகப்பட்டினம் 32 மயிலாடுதுறை 35); மேலும் மாவட்டத்தில் உள்ள 2169 ரவுடிகளின் வீடுகளில் (திருச்சி 251, புதுக்கோட்டை 331, கரூர் 137, பெரம்பலூர் 85, அரியலூர் 79 தஞ்சாவூர் 387. திருவாரூர் 394, நாகபட்டினம் 282, மயிலாடுதுறை 223 சோதனை நடத்தப்பட்டு 51 வகையான கொடூர ஆயுதங்கள் (Deadly Weapon) காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்திற்குட்பட்ட முக்கிய ரவுடியின் வீட்டை திருவிடைமருதூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் சோதனை மேற்க்கொண்டு 1824 மது பாட்டில்கள், கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யபட்டன. 

குற்ற வழக்குகளில் நீதி மன்றத்தில் ஆஜராகாமல் பிடிக்கட்டளை (NBW) நிலுவையில் இருந்த 19 ரவுடிகள் (புதுக்கோட்டை 2, கரூர் 1, தஞ்சாவூர் 2 திருவாரூர் 10, நாகபட்டினம் 4) மற்றும் 779 திருச்சி 85, புதுக்கோட்டை 88, கரூர் 36, பெரம்பலூர் 57, அரியலூர் 33 தஞ்சாவூர் 314, திருவாரூர் 106, நாகப்பட்டினம் 31 மயிலாடுதுறை 28 குற்ற வழக்குகளில் சம்மந்தபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ரவுடிகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் அவர்கள் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்கவும் 282 ரவுடிகள் மீது திருச்சி 15, புதுக்கோட்டை 8, கரூர் 11, பெரம்பலூர் 16, அரியலூர் 59, தஞ்சாவூர் 30, திருவாரூர் 44. நாகபட்டினம் 53, மயிலாடுதுறை 46 நன்னடத்தை பிணை ஆணை பெறுவதற்கு சம்மந்தப்பட்ட கோட்டாட்சியர் அவர்களுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டும், அதில் 121 திருச்சி 8. புதுக்கோட்டை 1, கரூர் 2. பெரம்பலூர் 12. அரியலூர் 18, தஞ்சாவூர் 28, திருவாரூர் 14, நாகபட்டினம் 19, மயிலாடுதுறை 19) ரவுடிகளுக்கு கடந்த 30 நாட்களில் நன்னடத்தை பிணை ஆணை பெறப்பட்டுள்ளது. ஏற்கனவேநன்னடத்தை பிணை ஆணை பெற்ற 61யுதுக்கோட்டை 2, தஞ்சாவூர் 1,நாகபட்டினம்1 மயிலாடுதுறை 2 ரவுடிகள் பிணை ஆணையை மீறி மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்ட காரணத்தினால் அவர்களுக்கு பிணை முறிவு ஆணை பெறப்பட்டு சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர். குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாதத்தில் 11 ரவுடிகள் (திருச்சி 1, தஞ்சாவூர் 1 திருவாரூர் 9) சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் நடமாட்டங்கள், செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகளில் விரைந்து தண்டனை பெறுவதற்கு சிறப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்படும் ரவுடிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய
  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

 
#டெலிகிராம் மூலமும் அறிய….  https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *