திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி இப்பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவி சில தினங்களுக்கு முன்பு கைகால் முகம் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்காக சிறுமியின் தாய் லால்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் காண்பித்தபோது மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்த போது சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் திருச்சி சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் லால்குடி அனைத்து மகளிர் போலீசார் கர்ப்பிணியான பள்ளி சிறுமியிடம் விசாரணை நடத்திய போது அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக உள்ள ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் சதீஷ்குமார் வயது 40 என்பதும் தனது வீட்டிற்கு அருகில் உள்ள 60 வயது முதியவர் சந்திரசேகர் தான் தனது கர்ப்பத்துக்கு காரணம் எனக் கூறியதின் அடிப்படையில் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் லால்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments