திருச்சிராப்பள்ளி தந்தை பெரியார் அரசுக் கலைக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர்மா.பிரதீப் குமார்.இ.ஆ.ப., இன்று (10.02.2023) தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ்.சரவணன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் அ. செந்தில்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் துணை இயக்குனர் ஐ. மகாராணி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உதவி இயக்குனர் தஇஸ்மத் பானு,உயர்கல்வி ஆலோசகர் அ. வாசுதேவன், பட்டய கணக்கு பயிற்சியாளர் அ. நாராயணன், கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments