கடந்த வாரம் டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக அறுவடை செய்யப்பட்டிருந்த, அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மழையில் நனைந்திருந்த நிலையில் அவற்றின் ஈரப்பத அளவை கணக்கீடும் மத்திய அரசின் குழு இன்று திருச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன் தினம் நாகையில் தொடங்கிய இந்த ஆய்வு மூன்றாவது நாளாக இன்று திருச்சியில் நடைபெறுகிறது. இந்த ஆய்வில் மத்திய தொழில்நுட்ப குழு பிரபாகரன் தலைமையில் யூனுஸ், போயா ஆகியோர் நெல் ஈரப்பத அளவை பெரிய சூரியூரில் முதலில் ஆய்வு செய்தனர். அடுத்ததாக குண்டூர், மணப்பாறை பகுதிகளிலும் ஆய்வு செய்ய உள்ளனர்.
திருச்சியில் மத்திய தொழில்நுட்பக் குழு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நிலை எடுத்து சோதனை செய்து அதில் உள்ள ஈரப்பதளவை குறித்துக் கொண்டு அதற்கான மாதிரிகளை எடுத்து சிறு மூட்டைகளாக கட்டி எடுத்து சென்றனர்.
இன்று (10.01.2023) மதியம் புதுக்கோட்டை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஈரப்பத அளவை சோதிக்க உள்ளனர். நாளை (11.02.203) அரியலூர் மற்றும் கடலூரில் ஆய்வு முடித்துவிட்டு இதற்கான அறிக்கையை மத்திய அரசிடம் கொடுக்கப்பட உள்ளதாக குழுவினர் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments