இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது 87வது நிறுவன தினத்தை கொண்டாடியது. அதை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம் பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல அலுவலகமும், திருச்சி மதுரம் மருத்துவமனையும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முகாமிற்கு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் சுமார் 35 பேர் இரத்த தானம் செய்தனர். 87 வது நிறுவன தினத்தை ஒட்டி 87 நபர்களுக்கு சிறப்பு கடன்கள் வழங்கப்பட்டன.
இந்த தருணத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது மனமார்ந்த நன்றியை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்தும், வரும் ஆண்டுகளில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கவும் உறுதியளிக்கிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments