Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி ரயில்வே கோட்டம் சரக்குகளை கையாள்வதில் வரலாற்று சாதனை

திருச்சிராப்பள்ளி கோட்டம், தெற்கு ரயில்வே, நடப்பு நிதியாண்டின் (01.04.2022) முதல் (10.02.2023) வரை சரக்கு வருவாய் மற்றும் ஏற்றுதலில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, சரக்கு ஏற்றுவதில் தெற்கு ரயில்வேயில் திருச்சிராப்பள்ளி கோட்டம் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது.

மேற்கூறிய காலப்பகுதியில் 11.685 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றப்பட்டு, சரக்கு போக்குவரத்து மூலம் வருவாயில் 86.805% அதிகரிப்பு மற்றும் சரக்கு ஏற்றுதலில் 53.325% அதிகரிப்புடன், கடந்த நிதியாண்டின் காலகட்டத்துடன் ஒப்பிடும் போது,  திருச்சிராப்பள்ளி கோட்டம் ரூ.673.046 கோடி சரக்கு வருவாய் ஈட்டியுள்ளது. .

சரக்கு ஏற்றுதல் நிலக்கரி, உணவு தானியங்கள் மற்றும் சிமெண்ட் பொருட்களை ஏற்றிச் செல்வதன் மூலம் அதிகரித்தது. இந்த ஏற்றுதல் மூலம் முறையே நிலக்கரி மூலம் ₹465.054 கோடியும், உணவு தானியங்கள் மூலம் ₹106.042 கோடியும், சிமென்ட் மூலம் ₹43.624 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நிலக்கரி ஏற்றுதல் மூலம் 135.641% வருவாய் அதிகரித்துள்ளது, உணவு தானியங்கள் ஏற்றுதல் மூலம் 61.239% வருவாய்  அதிகரித்துள்ளது.

திருச்சிராப்பள்ளி கோட்ட வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரக்கு கையாண்டதில் இதுவே சிறந்ததாகும். மேலும் நிதியாண்டு முடிவதற்குள் 11.685 மெட்ரிக் டன் என்ற இலக்கை மிஞ்சும் வகையில் உள்ளது. திருச்சிராப்பள்ளி கோட்ட அணியின் அயராத முயற்சியால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *