திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா கொடும்பபட்டி ஊராட்சியில் வசிப்பவர் பழனியாண்டி. விவசாயியான இவரது ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 70 ஆடுகளில் 22 செம்மறி ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததில், 10 பெரிய ஆடுகள் மற்றும் 12 குட்டி ஆடுகள் பலியானது. ஒன்பதற்கும் மேலான ஆடுகள் காயம் அடைந்தன.
இது குறித்து வளநாடு கால்நடைத்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பெயரில் அங்கு சென்ற வனத்துறையினர் இறந்த ஆடுகளை பார்வையிட்டனர். பின் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு இறந்த ஆடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்து அதன் பின்னர் புதைத்தனர்.
மேலும் இவரது அண்ணன் கருப்பன் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை நான்கு நாட்களுக்கு முன்பு 14 ஆடும், சென்ற மாதம் 35 என மொத்தம் 49 ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததில் ஆடுகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments