திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி சார்பாக பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதி 2016 கீழ் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என மெகா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணியினை நகர்மன்ற தலைவர் கீதா ஆ.மைக்கேல்ராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் சியாமளா, நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நிறைவுற்றது. இதில் பேரணியாக சென்றவர்கள் பிளாஸ்டிக் தீங்கு குறித்து கோஷங்கள் எழுப்பியும், பாதகைகளிய கைகளில் ஏந்தியும் சென்றனர்.
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments