திருச்சி உறையூர் குழுமாயி அம்மன் கோவில் பகுதியில் தமிழக முழுவதும் 64 வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ள பிரபல ரவுடி துரைசாமி மற்றும் அவரது சகோதரர் சோமு சுந்தரம் ஆகிய இருவரை துப்பாக்கி சூடு நடத்தி திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.
குறிப்பாக இந்த சம்பவத்தின் பொழுது ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு பலத்தம் காயம் ஏற்பட்டதன் காரணத்தினாலும் தற்காப்புக்காகவும் துப்பாக்கி சூடு நடத்தியதாக திருச்சி காவல்துறை ஆணையர் சத்திய பிரியா தகவல் தெரிவித்துள்ளார்.
இதில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ரவுடி துரைராஜ் மற்றும் சோமசுந்தரம் ஆகிய இருவருக்கும் முழங்கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர்.
போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த ரவுடி சின்னதுரை மீது ஐந்து கொலை வழக்குகள் உட்பட 64 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதேபோல் சோமசுந்தரம் என்பவர் மீதும் மூன்று கொலை வழக்குகள் உட்பட 25 வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளதும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments