தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிஆர் பாலு, திருநாவுக்கரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கார் மூலம் சாலை மார்க்கமாக தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார். அப்போது 10க்கும் மேற்பட்டோர் முதலமைச்சரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில்….. கடந்த 2019ஆம் திருச்சிராப்பள்ளி ஆவினில் நடைபெற்ற நேரடி பணிநியமனத்தின் மூலம் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கு பெற்று முறையாக பணி நியமனம் செய்யப்பட்டு, திருச்சிராப்பள்ளி பொதுமேலாளர், கமிஷனர் மற்றும் துணை பதிவாளர் ஒப்புதல் பெற்ற பின்னரே எங்களுக்கு பொது மேலாளரால் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த 2021 பிப்ரவரி முதல் 2023ஆம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி வரை அதாவது, 1வருடம் 11 மாதங்கள் (கொரோனா காலகட்டத்திலும்) நல்ல நிலையில் பணியாற்றி எங்களது தகுதிக்கான பருவம் (Probation Period) முடிவடையும் நிலையில் மேலும் பணி நிரந்தரம் செய்ய வேண்டிய தருணத்தில் எங்களை திடீரென்று (03.01.2023) அன்று
எங்களது பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்து எவ்வித முன் அறிவிப்பும் இன்றி 43 பணியாளர்களையும் நிரந்தர பணி நீக்கம், செய்து இரவு 10.30 மணிக்கு ஆணை வலுக்கட்டாயமாக வழங்கப்பட்டது.
இதனால் எங்களது குடும்ப வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பணியினை மட்டுமே நம்பி எங்களது குடும்பம் உள்ளதால் / பிள்ளைகளின் படிப்பு எதிர்காலமும் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே எங்களை மீண்டும் பணியில் சேர அனுமதித்து ஆணையிடுமாறு மிகவும் தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி வேண்டிக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments