திருச்சி வயலூர் சாலை குமரன் நகர் மெயின் ரோட்டில் ஆர்.எம்.சி ரத்னா மெடிக்கல் சென்டர் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் செவிலியராக திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே அல்லித்துறை சாந்தாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி மகள் நிவேதா லட்சுமி (20) என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று மாலை பணியிலிருந்த போது மருத்துவமனையின் 5வது மாடிக்கு சென்ற நிவேதா லட்சுமி திடீரென அங்கிருந்து குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனையில் இருந்தவர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் செவிலியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர் மேலும் நிவேதா லட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்தும் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நிவேதா லட்சுமி கடந்த ஒரு மாத காலமாக இந்த மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த இரு தினங்களாக விடுப்பு எடுத்து இருந்த இவர் இன்று காலை தான் பணிக்கு வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments