Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

எடப்பாடி பழனிச்சாமியின் தரம் அவ்வளவு தான் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு திருச்சியில் பேட்டி

திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (மற்றும்) தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்று (14.03.2023) நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் நேரு மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு பணி நியமன ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நேரு…. திருச்சி மாவட்டத்தில் 48,000 மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு 98 சதவீதம் அடையாள அட்டை வழங்கப்பட்டு மாநிலத்திலும் முதல் மாவட்டமாக திருச்சி திகழ்கிறது. தற்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறை உடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாமில் 33 நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன. 1600 காலி பணியிடங்கள் அவர்களிடம் உள்ளது. 

வேலைவாய்ப்பு முகாமில் பங்கெடுக்காதவர்களையும் தொடர்ந்து தொடர்பு கொண்டு 100% அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பிரத்யேகமாக காது கேளாதவர்களுக்கு தயாரிக்கப்பட்ட கைப்பேசிகளை வழங்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் குறித்து தொடர்ந்து அநாகரிகமாக பேசுகிறார். அவரின் தரம் அவ்வளவு தான். அதனால் தான் அவ்வாறு பேசுகிறார். தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும் போது எங்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டது. தற்போதைய முதலமைச்சர் மீதே அப்போது நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டது.

அதை நாங்கள் நீதிமன்றம் சென்று தான் சந்தித்தோம். ஆனால் அ.தி.மு.க வினர் தற்போது வழக்குப் போட்டதற்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள் என்றார். முன்னதாக முதல் 20 நபர்களுக்கு பணி நியமன ஆணை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய….  https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *