திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் அம்மனுக்கு சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி சார்பில் பூச்செரிதல் விழா கொண்டாடப்பட்டது .
சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் 16 வது ஆண்டாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் க்கு பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சரவணன் செயல் அலுவலர் சந்திரகுமார் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள் மட்டுமல்லாது
திருச்சி மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அவர்களது குடும்பத்தினர்கள் ஒருமித்து 300 க்கு மேற்பட்டோர் சமயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒன்று கூடி பூக்களை கூடையாக சன்னதி வீதி வழியாக ஊர்வலமாக சென்று சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ள அம்மனுக்கு பூக்களை செலுத்தினர்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments