திருச்சி மாநகர், மாவட்ட சாலைகளில் தினமும் சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து வருவது வழக்கமாகி விட்டது. இதில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை ஓட்டும் அந்த இளைஞர் தாறுமாறான வேகத்தில் செல்வதுடன் முன் சக்கரத்தை தூக்கிக்கொண்டு, வாகனத்தை ஓட்டுகிறார்.
பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ள காவிரி பாலத்தில் அந்த இளைஞர் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை தூக்கிக்கொண்டு சாகசம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த சாகச வீடியோவுடன், சினிமா வசனங்கள் இணைத்து வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது மட்டுமின்றி இந்த சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் திருச்சி மாவட்டம் புறநகர் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்த சாகசம் செய்து அந்த வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் வீலிங் செய்வது மற்ற வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்து. எனவே பொது நலன் கருதி இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மக்களின் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து திருச்சி மாநகரில் பைக் வீலிங் செய்த இளைஞரை காவல்துறையினர் பிடித்துள்ளனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கல்லூரியில் படித்து வரும் 22 வயதான இளைஞர், காந்தி மார்க்கெட் பகுதியில் வசித்து வருவது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் மூலம் அந்த இளைஞர் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில், மாநகர சாலைகளில் பைக் சாகசம் செய்ததால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.
இது போன்று பைக் வீலிங் யாரும் செய்ய வேண்டாம் என்றும், இதனால் விபத்துகள் ஏற்படும். மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு உண்டாகும். மற்ற இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments