தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கிணங்க திருச்சிராப்பள்ளி வரகனேரி அக்ரஹாரம் வ.வே.சுப்பிரமணிய அய்யர் நினைவு இல்லத்தில் அவரின் பிறந்தநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள
அவரது திருவுருவப் படத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தி நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வ.வே.சுப்பிரமணிய அய்யரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்களை பார்வையிட்டார்.
மேலும் அங்கு செயல்பட்டு வரும் கிளை நூலகத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் (பொ) வைத்தியநாதன், மண்டலத் தலைவர் மதிவாணன், மாவட்ட மைய நூலக அலுவலர் அ.பொ. சிவக்குமார், வருவாய் வட்டாட்சியர் (கிழக்கு) கலைவாணி
மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், வ.வே.சுப்பிரமணிய அய்யரின் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments