திருச்சியில் கோடை வெயில் சுட்டெரித்து வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக திருச்சி புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தது.
இருப்பினும் மாநகரில் வெயில் வாட்டி வதைத்து இரவு நேரங்களில் அனல் காற்று வீசி வந்தது. இதற்கிடையில் இன்று மாலை ஐந்து மணிக்கு பெய்த மழை ஓரளவுக்கு திருச்சி மாநகர் மக்களின் வெப்பத்தை தனித்தது.
இடி மின்னலுடன் மழை பெய்ததால் திருச்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது அப்போது கொள்ளிடம் ஆற்றின் கரையில் இருந்த இரு பனை மரங்கள் மேல் இடி விழுந்ததில் மரங்கள் தீ எரிந்தன.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments