தஞ்சாவூரில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது டிவிஎஸ் டோல்கேட் மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பேருந்து முன்னே சென்ற சிமெண்ட் லாரியின் பின்புறம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக லேசான காயத்துடன் பயணிகள் உயிர் தப்பினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments