திருச்சி மாவட்டம் மணப்பாறை புத்தாநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் (03.04.2023) ம் தேதி 12ம் வகுப்பிற்கான கடைசி தேர்வு நடைபெற்றது. இதில் 140 மாணவர்கள் தேர்வெழுதினர்.
தேர்வை முடித்த மாணவர்களில் சிலர் 3.30 மணியளவில் 25 வகுப்பறைகள் கொண்ட இரண்டு மாடி கட்டிடத்தில் முதல் தளம், தரைத்தளத்தில் உள்ள சுமார் 17 வகுப்புகளில் இருந்த மின்விளக்குகள்,
மின்விசிறிகள், மேஜை, நாற்காலிகளை உடைத்து விட்டு சென்று விட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
389
04 April, 2023










Comments