இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அக்டோபர் மாதம் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தனது இரண்டு ஆண் குழந்தைகளுக்கு ‘உயிர் ருத்ரோநீல் N சிவன்’ மற்றும் ‘உலக் தெய்விக் N சிவன்’ என பெயர் வைத்துள்ளதாக அண்மையில் இந்த தம்பதி அறிவித்திருந்தது. இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அவர்களது குலதெய்வ கோவிலுக்குச் செல்ல இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர்.
பின்பு அங்கிருந்து கார் மூலம் கும்பகோணம் வழுத்தூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். மேலும் ரசிகர்கள் இவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர் இந்நிலையில் அவர்கள் மீண்டும் சென்னை செல்வதற்காக திருச்சி ரயில் நிலையம் வந்தனர்.
நயன்தாரா விக்னேஷ் சிவனை கண்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர் இதனால் திருச்சி ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. சில ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பிளாட்பாரம் டிக்கட் எடுக்காமல் வந்திருந்தனர். அவர்களை பரிசோதகர்கள் எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி தேஜாஸ் ரயில் மூலம் திருச்சியில் இருந்து சென்னை சென்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments