திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண். 61 மற்றும் 65 பகுதிகளில் நூற்றுக் கணக்கான குடும்பங்களுக்கு பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் உள்ளது. இவர்கள் தங்களது வாரிசுகளுக்கோ, உறவினர்களுக்கோ. விற்பனைக்கோ பரிவர்த்தனை செய்யும்போது வரைபட நகலில் (EXTRACT FROM THE TOWN SURVEY LAND REGISTER) ரயத்துவாரி என்பதற்கு பதிலாக சர்க்கார் புறம்போக்கு என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பத்திரப்பதிவு மற்றும் மாநகராட்சியில் விடுகட்ட அனுமதி, கடன் திட்ட அனுமதி போன்றவைகளை பெறுவதில் தடைகள் ஏற்பட்டு எதுவும் செய்யமுடியாத நிலையில் மிகுந்த மனஉளச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். ஆகவேமேற்கண்ட பிழையினை சரிசெய்வதற்கு தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவி செய்து கொடுக்குமாறு நேற்று 06/04/2023 திருச்சி மாவட்ட ஆட்சியரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
AITUC மாவட்ட பொது செயலாளர் க.சுரேஷ் M.C. CPI மாவட்ட செயலாளர் S.சிவா, பொன்மலை பகுதி செயலாளர் P.ராஜா.இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் R.கார்த்திக் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments