திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சஞ்சய் வெளியிட்டுள்ள அறிக்கையில்…. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையில் 19 வயது பிரிவுக்கான கிரிக்கெட் போட்டிகள் மாவட்டங்களில் நடக்கவுள்ளது. இதற்கான திருச்சி மாவட்ட வீரர்கள் தேர்வு ஏப்.15ம் தேதி சாரநாதன் பொறியியல் கல்லுாரியில் காலை 7:30 மணிக்கு நடக்கிறது.
2004 செப். 1ம் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் ஆதார் நகல் அல்லது படிக்கும் கல்வி நிறுவனங்களில் இருந்து சான்றிதழ் பெற்று வர வேண்டும். இதற்கான விண்ணப்பம் புத்துாரில் உள்ள மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் ஏப். 14 வரை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு 7010757073, 9791622777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments