திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த பம்பரம்சுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சை. இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த வருடம் தனது நிலத்தில் வாழை விவசாயம் சாகுபடி செய்து வந்துள்ளார்.
வாழையில் உதயா கற்பூரவள்ளி என்கிற வாழை ரகம் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் அவரது நிலத்தில் 6 அடி உயரமுள்ள பிரம்மாண்ட வாழைத்தார் விளைந்துள்ளது.
ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சை, லால்குடி தென்றல் கூட்டுறவு பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் குழுத்தலைவராக உள்ளார்.
லால்குடி தென்றல் கூட்டுறவு பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர் பாலமுருகன் மற்றும் அப்பகுதி விவசாயிகள் பாராட்டினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments