திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 11நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

கொடியேற்ற நிகழ்விற்காக அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து வெள்ளி பள்ளத்தில் புறப்பட்டு கொடியேற்றம் மண்டபம் வந்தடைந்தார்.பின்னர் கொடி படம் புறப்பட்டு கோயில் வளாகத்தை சுற்றி வந்தது.பின்னர் தங்கக் கொடி மரத்தில் கொடி படத்திற்கு பட்டர் சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்யப்பட்டு மேஷ லக்கனத்தில் சரியாக 7.00 மணிக்கு மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு இருந்த பெரும் திரளான பக்தர்கள் ரெங்கா ரெங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர்.
இன்றைய தினம் முதல் அடுத்து வரும் 11 உற்சவ நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளையில் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனம், இரட்டை பிரபை வாகனம், கருட வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகின்ற 19ஆம் அன்று நடைபெற இருக்கின்றது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரைத் தேரோட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
13 Jun, 2025
389
11 April, 2023










Comments