காவல்துறை இயக்குனர், பயிற்சி கல்லூரி, சென்னை அவர்களின் உத்தரவின் பேரிலும், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் . சரவண சுந்தர் வழிகாட்டுதலின் படி திருச்சி சரக பணியிடைப்பயிற்சி மையத்தில் திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி, கரூர், பெரம்பலூர் அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய 144 காவல் நிலையங்களில் ஒரு காவல் நிலையத்திற்கு ஒரு காவலரை தேர்வு செய்து அக்காவலர்களுக்கான ஒரு நான் முதலுதவி சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

திருச்சி காவேரி மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு ஐந்து கட்டங்களாக பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 30 காவலர்களுக்கு இன்று (11.04.2023) திருச்சி பணியிடைப்பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் திருச்சி காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் முபாரக் அலி, சரண்யா மற்றும் தலைமை பயிற்சியாளர் சுப்புரெத்தினபாரதி செவிலியர் மாலதி, தொழில்நுட்ப பயிற்சியாளர் மாதவன் ஆகியோர்கள் கலந்து கொண்டு காவலர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்தார்கள்.

பயிற்சி வகுப்புகளை திருச்சி பணியிடைப்பயிற்சி காவல் துணைக்கண்காணிப்பாளர் ஏற்பாடு செய்து இருந்தார். பயிற்சியில் கலந்து கொண்ட காவலர்கள் மேற்படி முதலுதலி பயிற்சி சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாக தகவல் தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
        
                                            
                            13 Jun, 2025                          
390                          
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
        
 11 April, 2023
            




			

          
                          
            
            
            
            
            
            
            
            
            
            
                          
                          
                          
                          
                          
                          
                          


Comments