மணப்பாறை அருகே ஆவிக்காரன்பட்டி ஆவிக்குளத்தில் 35 ஆண்டுகளுக்கு பின் மீன்பிடி திருவிழா – நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு விரால், கெண்டை, கட்லா, கெளுத்தி மீன்களை பிடித்து சென்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பொய்கைப்பட்டி ஊராட்சி ஆவிக் காரன்பட்டி ஆவிக்குளத்தில்சுமார் 19 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்தில் இன்று விடியற்காலை 6 மணிக்கு மீன் பிடித்திருவிழா 35 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது.

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னதாகவே குளக்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். ஆலய வழிபாட்டிற்கு பின் ஊராட்சிமன்ற தலைவர் ரோஸின் சகாயமேரி ராஜசேகர், மற்றும் ஊர் முக்கியஸ்தர் மூக்கையா கவுண்டர் முன்னிலையில் மீன் பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர்.
குளக்கரையில் கையில் வலைகளுடன் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடி மீன் பிடிக்க தொடங்கினர். ஜாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடைபெறும் இந்த மீன்படி திருவிழாவில், சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்திருந்தனர்.

பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்கத்தொடங்கினர். அதில் மீன்பிடித்தவர்கள் கைகளுக்கு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, கட்லா, ஜிலேபி, கெண்டை, கொரவை, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன.
        
                                            
                            13 Jun, 2025                          
390                          
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
        
 12 April, 2023
            




			

          
                          
            
            
            
            
            
            
            
            
            
            
                          
                          
                          
                          
                          
                          
                          


Comments