திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் அரசு உதவியுடன் இயங்கி வரும் சாக்சீடு என்ற தனியார் தொண்டு நிறுவனத்தில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட, சாலை ஓரம் கண்டெடுக்கப்பட்ட, 33 கைகுழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக இன்று ஒரு 2 மாத குழந்தை உயிரிழந்தது. மேலும் ஐந்து குழந்தைகள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. குழந்தை இறப்பிற்கு காரணம் என்னவென்று மருத்துவரிடம் கேட்டபொழுது இவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாததால் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமல் மூச்சு திணறல் ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களில் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், தற்பொழுது ஒரு குழந்தை இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments